சித்திரை அமாவாசைக்கு சதுரகிரி செல்ல அனுமதி! ஆனால்..?

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (09:46 IST)
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல சித்திரை அமாவாசையை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது சித்திரை அமாவாசை வருவதால் பக்தர்கள் நாளை முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு மலைக் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. முன்னதாக காலை 6 மணி முதலே மலையேற்ற அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் நண்பகம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் யாரும் இரவில் மலை மீது தங்க அனுமதி இல்லை என்றும், அருவிகள், ஊற்றுகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்