சதுரகிரி கோவில் தரிசனம்; 13 நாட்களுக்கு அனுமதி! – மகிழ்ச்சியில் பக்தர்கள்!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:27 IST)
சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபட இந்த முறை 13 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் 4 நாட்கள் மட்டும் வனத்துறை பக்தர்கள் பயணிக்க அனுமதி அளித்து வந்தது. இந்த மாதம் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் நவராத்திரியும் நடைபெறுவதால் மொத்தமாக 13 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (செப்டம்பர் 23) முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபடலாம். வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் தங்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் இறங்க கூடாது. கனமழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்