'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

Mahendran

செவ்வாய், 29 ஜூலை 2025 (18:01 IST)
இந்தியா - பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிட்டத்தட்ட 29 முறை கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். 
 
"இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை மத்திய அரசு மறுத்து மட்டுமே அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், டிரம்ப் சொல்வது உண்மையாக இல்லை என்றால், 'நீங்கள் சொல்வது பொய், நீங்கள் ஒரு பொய்யர்' என்று பிரதமர் மோடி நேரடியாக டிரம்ப்பிடம் சொல்ல வேண்டும். உங்களுக்கு இந்திரா காந்தியின் 50 சதவீத தைரியத்தில் பாதி இருந்தால் கூட இதை சொல்லுங்கள், இதை செய்யுங்கள் பார்ப்போம்," என்று ராகுல் காந்தி சவால் விட்டது கவனத்தை பெற்றுள்ளது.
 
மேலும், இந்தியா இழந்ததாகக் கூறப்படும் விமானங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
டிரம்ப்பின் தொடர்ச்சியான கூற்றுகள் மற்றும் அதற்கு மத்திய அரசு அளிக்கும் மழுப்பலான பதில்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த நேரடி சவால், பிரதமர் மோடிக்கு மேலும் அழுத்தத்தை அளிப்பதாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்