ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, அவரது தாய் கூலி வேலைக்கு சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் வீடு திரும்பிய அவரது தந்தை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தப்போக்குடன் இருந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியின் தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.