அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: வன்னியரசு கோரிக்கை..!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (09:42 IST)
ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் வன்னியரசு கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பணம் கைமாறி உள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணாமலையை கைது செய்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பேரணியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்