என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (17:54 IST)
ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து தெரிவித்த கருத்துகள் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. "என் மகன் கல்லூரிக்குச் செல்ல மாட்டான், சாட்ஜிபிடி மூலம் கிடைக்கும் கல்வி அறிவே போதும்" என்றும், "அடுத்த சில ஆண்டுகளில் சாட்ஜிபிடி கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்" என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
 
அடுத்த தலைமுறைக்கு கல்வி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று சாம் ஆல்ட்மேன் கணித்துள்ளார். அவர்கள் AI மூலம் கல்வி கற்பார்கள் என்றும், AI இல்லாத உலகத்தையே அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை விட புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள்" என்றும், "தயாரிப்புகளும் சேவைகளும் மனிதர்களை விட AI மூலம் செய்யப்படுவது மேன்மையாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இருப்பினும், மனிதர்களுக்கு இணையான உணர்வுகள், குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உருவாக்கப்படும் சாட்போட்கள் மனிதர்களுக்கு இணையான உணர்வுடன் இருப்பதில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்