அதிமுக-பாஜக கூட்டணி அல்லது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணையும் என்றும் இந்த இரண்டிலும் தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் அமமுகவுடன் இணைந்து புதிய கூட்டணியை பாமக உருவாக்கும் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் கூறி வருகின்றன
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கள் கட்சியுடன் கூட்டணி சேரும் இரண்டு கட்சிகள் முடிவாகிவிட்டதாக கூறினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேசி முடிவாகி உள்ளது. ஒன்று ஆம் ஆத்மி, மற்றொன்று மதசார்பற்ற ஜனதா தளம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்
இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாமக நெருங்கிவிட்டதாகவும், தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் இந்த கூட்டணி தேர்தலுக்கு மறுநாளே உடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது