கழகத்தின் செயல் தலைவர் பிரசாந்த் கிஷோர்... தலைவரின் திட்டம் தான் என்ன??

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (18:40 IST)
திமுகவின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை  நியமித்துள்ளார் ஸ்டாலின் என பாமக செய்தி தொடர்பாளர் பகீர் கிளப்பியுள்ளார். 
 
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  
 
50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை செய்ய ஒருவர் தேவை என்றால் ஆளுமையுள்ள தலைவர், முடிவெடுக்கும் தலைவர் அந்த கட்சியில் இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரசாந்த் கிஷோர் குறித்து திமுக
இந்நிலையில் எரியும் விளக்கில் எண்ணெட் ஊற்றுவது போல பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தனது டிவிட்டர் பக்கத்தில், திமுகவின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை  நியமித்துள்ளார் ஸ்டாலின். 
 
இனி ஒரு வட நாட்டு ஆரியர்தான் திமுகவை வழிநடத்த உளார். மாற்றான் தோட்டத்து மல்லிகைகளே எங்கே போனது உங்கள் சுயமரியாதை? ஐயா வீரமணி இதற்கு பதில் சொல்வாரா? என கேள்வி எழுப்பி பரபரப்பை கூட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்