ஆம், கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். கோவை 57 வார்டுகளுடன் செயல்பட்டு வருவதால் நிர்வாக வசதிக்காக கோவை திமுக இரண்டாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர் கிழக்கு பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ.வும், 29 வார்டுகளை கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.