ஆளுநர் மாளிகை என்ன உங்க அறிவாலயமா? வம்புக்கு நிற்கும் ராஜேந்திர பாலாஜி!

செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:09 IST)
ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது என ஸ்டாலினுக்கு அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 
 
சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், இப்படியே செய்து கொண்டிருந்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாரும் தடுக்க முடியாது என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாகவும், அதற்காக அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.   
 
இதனைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகனும், சுப்பிரமணியனும் ஆளுநரை சந்தித்து ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய நிலையில், துரைமுருகனும் ஆளுநருக்கு இதையே வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் எழுதினார். 
 
இந்நிலையில் திமுகவினரின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது, மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்கவும்… அவரின் கோரிக்கையை ஏற்கவும்… என பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு திமுக தொண்டர்கள் சிலரோ பேசியது தவறு என வருந்தாமல், அத தவறு என சுட்டிக்காட்டுபவர்களை வம்புக்கு இழுப்பதா என ராஜேந்திர பாலாஜியை திட்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்