2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

புதன், 25 ஜூன் 2025 (14:02 IST)
இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாளையும் நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்