ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று உளவாளிகளுக்கு, ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை அளித்த நிலையில், அந்தத்தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாகப் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போதுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இந்தச் சூழலில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு, ஈரானிய நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டதாகவும், மூவரையும் ஈரான் அதிகாரிகள் தூக்கில் இட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.