பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !
தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில்தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2. 30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை ஆறு மணி முதல் காலை 6 மண்இ வரை மட்டுமே இயங்கும்.
மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமோட்டோ , உபேர் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது.அதில் காலை 7 முதல் 9: 30 மணி வரை; மதியம் 12 முதல் 2: 30 மணி வரை: மாலை 6 முதல் 9 மணி வரை ஆகும்.
விளைபொருட்களை 180 நாட்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம், சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பெட்ரொல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2: 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.