பங்குசந்தை வீழ்ச்சி : வர்த்தகத்தை நிறுத்தியது இந்தியா!

வெள்ளி, 13 மார்ச் 2020 (10:15 IST)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தொடர்ந்து புள்ளிகள் தொடர்ந்ததை தொடர்ந்து வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது இந்தியா.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிலைமை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குசந்தை இறங்குமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய பங்குசந்தை ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 3090 புள்ளிகள் குறைந்து 29,687 ஆக தொடங்கியது, நிப்டி 966 புள்ளிகள் குறைந்து 8,624 ஆனது. இதனால் உடனடியாக 45 நிமிடங்கள் பங்கு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வர்த்தகம் தொடங்கியிருந்தாலும் 5 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்திக்கும் பட்சத்தில் பங்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும் என கூறப்படுறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்