புதிய பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து எப்போது? தென்னக ரயில்வே தகவல்..!

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (13:09 IST)
பாம்பன் கடல் மீது கடந்த சில ஆண்டுகளாக புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த புதிய காலத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ஆங்கிலேயர் காலத்தில் பாம்பன் பாலம் கட்டப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த பாலத்தில் கடந்த 1914 ஆம் ஆண்டின் முதல் ரயில் சென்று கொண்டிருக்கிறது. இந்த ரயில் பாலத்தில் கப்பல் கடந்து செல்ல நவீன தூக்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் பாம்பன் பாலத்தின் உப்பு தன்மை காரணமாக அரிமானம் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது ரசாயன பெயிண்ட் அடிக்கப்பட்டது.

 இந்த நிலையில் கப்பல் வரும்போது வழி விடுவதற்காக திறக்கப்படும் பகுதியில் துருப்பிடிக்க ஆரம்பித்ததால் பாலம் அபாய நிலையை எட்டியதாக கூறப்பட்டது. இதற்காக 550 கோடியில் புதிய பாலம் கட்ட  தென்னக ரயில்வே  முடிவு செய்து அதற்கான பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

புதிய பாலத்தின் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் வரும் அக்டோபர் முதல் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்