பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: அலட்சியமாக இருந்த கேட் கீப்பரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (09:28 IST)
கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால்தான் நடந்தது என கூறப்படுவதையடுத்து, பொதுமக்கள் அவரை ஓட ஓட விரட்டி சென்று அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூர் மாவட்டம், செம்பங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன்மீது ரயில் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வேன் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டதாகவும், அதிலிருந்த பள்ளிக்குழந்தைகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த விபத்துக்கு செம்பங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்று கூறப்படும் நிலையில், அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடி ரயில்வே கேட் கீப்பரை தாக்க முயன்ற நிலையில் அவர் தனது உயிரை காப்பாற்ற ஓடிய நிலையில், பொதுமக்கள் அவரை ஓட ஓட விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. 
 
கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்