முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! - மக்களே பெயரை சேர்க்க வசதி!

Prasanth K

செவ்வாய், 8 ஜூலை 2025 (09:27 IST)

இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில் இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடக்காமல் போனது. அதன்பின்னர் நீண்ட காலமாக இந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது?

ஏப்ரல் 2026 முதல் வீடுகளை கணக்கெடுக்கும் பணியும், பிப்ரவரி 2027 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதோடு சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

 

இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் மத்திய அரசின் கணக்கெடுப்பு செயலியை பயன்படுத்தி நேரடியாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுக்க உள்ளனர். இவை மத்திய சர்வரில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும்.

 

ஆங்கிலம் மட்டுமல்லாது அனைத்து மாநில மொழிகளிலும் இந்த செயலி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதில் பொதுமக்களே தங்கள் பெயர் விவரங்களையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்