பீகாரில் இன்னொரு பாலம் இடிந்தது.. 3 வாரங்களில் 13 பாலங்கள் இடிந்ததால் அதிர்ச்சி..!

Mahendran

வியாழன், 11 ஜூலை 2024 (10:12 IST)
பீகார் மாநிலத்தில் ஏற்கனவே சமீப காலமாக 12 பாலங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியான நிலையில் நேற்று இன்னொரு பாலம் இணைந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சஹர்சா என்ற மாவட்டத்தில் உள்ள மஹிசி கிராமத்தில் தான் பாலம் இடிந்து விழுந்ததாகவும் ஆனால் நல்ல வேளையாக இந்த பாலம் இடிந்த போது அந்த பாலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லவில்லை என்பதால் எந்த விதமான உயிரிழப்பு, காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து துணை ஆட்சியர் ஜோதி குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விரைவில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது இந்த பாலம் கட்டப்பட்டதாகவும் 14 ஆண்டுகளில் இந்த பாலம் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மொத்தம் 13 பாலங்கள் பீகாரில் மட்டும் இடிந்து விழுந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்