9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

Senthil Velan

சனி, 29 ஜூன் 2024 (15:13 IST)
பீகாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், கடந்த 9 நாட்களில் 5 வது முறையாக பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலத்தில் சமீப காலத்தில் பாலங்கள் இடிந்து விருது சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.  பின்னர் ஜூன் 22-ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.
 
அடுத்த நாள் (ஜூன் 23) கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது. பின்னர் ஜூன் 26 கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.
 
இந்நிலையில் இன்று மதுபானி மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்தது.  இதன் மூலம் கடந்த 9 நாட்களில் 5 வது முறையாக பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,  வாழ்த்துகள்..! பீகாரில் இரட்டை என்ஜின் அரசின் இரட்டை அதிகாரத்தில், 9 நாள்களில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று விமர்சித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய ஜனநாயக கட்சிகளுடன் இணைந்துள்ள முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்றும் பாலங்கள் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதை “ஊழல்” என்று சொல்லாமல் “மரியாதை” என்று சொல்லிக்கொள்கிறார்கள் சில நேர்மையானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ: காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
 
இந்தச் சுரண்டல்களுக்கு எதிராக மீடியாக்கள் வாய் திறக்காதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பாலங்கள் இடிந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று  தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்