வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:26 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை சில தினங்களில் உருவாக உள்ளதால் தமிழகத்தின் பலப்பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கான காலம் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்டு 4ம் தேதிக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் பட்சத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்