தங்கம் விலைய விட இதுதான் அதிர்ச்சியா இருக்கு! – விலையேறிய பூக்கள்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளபோது ஆடி மாதம் என்பதால் பூக்களில் விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தளர்வுகளின் காரணமாக கிராமப் பகுதிகளில் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஆடி மாதம் என்பதால் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருவதால் பூக்களின், வரத்தும் விலையும் அதிகரித்துள்ளன.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, என்றாலும் முக்கிய பூஜைகள் செய்யப்பட்டு வருவதால் அங்கும் பூக்கள் வாங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து சேவை இல்லாததால் பூக்களுக்கான தேவையும், விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

வழக்கமாக விற்கப்பட்ட விலைகளை தாண்டி மல்லிகை பூ கிலோ ரூ.1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ.450 ஆகவும், சம்மங்கி அரலி போன்றவை ரூ.150 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்