தமிழர்களின் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி 18ம் திகதி அன்று நடைபெறும் இந்த விழா ஆற்றில் தண்ணீர் வரத்தை கொண்டாடும் விதமாகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வாகவும் உள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட காலத்தில் காவிரி ஆற்றில் நீர் திறப்பு நடக்காததால் சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு நாட்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் ஆறுகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.