அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

Mahendran

திங்கள், 7 ஏப்ரல் 2025 (11:56 IST)
சட்டப்பேரவையில் இன்று, அதிமுக எம்எல்ஏக்கள் "அந்த தியாகி யார்?" என்ற பேட்ஜ்  அணிந்து சட்டசபைக்கு வருகை தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் முன்னாள் அமைச்சர்களூம் இன்று "அந்த தியாகி யார்?" என்ற பேட்ஜ்  அணிந்து சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.
 
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை குறிப்பிடும் வகையில் சட்டையில் இந்த பேட்ஜ்   அணிந்து வந்திருக்கிறனர் என்று கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ரூ.1,000 கோடி டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த சில பரபரப்பான சம்பவங்களால், இந்த ரூ.1,000 கோடி ஊழல் பொதுமக்களாலும் அரசியல்வாதிகளாலும் மறக்கப்பட்ட நிலையில் இருந்து, இன்று திடீரென மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ்  அணிந்து வந்ததன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, டாஸ்மாக் ஊழல் குறித்து மீண்டும் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்