இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

Prasanth Karthick

திங்கள், 7 ஏப்ரல் 2025 (11:05 IST)

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் லேண்ட் ரோவர் நிறுவனம் கார் ஏற்றுமதியை நிறுத்திய நிலையில் டாடா நிறுவனம் தனது பங்கில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரிவிதிப்புகள் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த அதிக வரியால் உலக நாடுகள் கடும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள நிலையில், பங்குசந்தையும் சரிவை சந்தித்து வருகிறது.

 

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் எழுந்த சிக்கலால் இங்கிலாந்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் லேண்ட்ரோவரின் பங்குகள் கணிசமாக குறைந்த நிலையில், அதன் உறுப்பு பங்குதாரரான இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பும் 10 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 

 

அமெரிக்காவின் இந்த கெடுபிடி வரி விதிப்பால் மேலும் பல நாடுகளை சேர்ந்த மல்டிநேஷனல் நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை நிறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பிற நாட்டு தயாரிப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுடன், அமெரிக்காவை முக்கிய விற்பனை கேந்திரமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்