இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

Mahendran

திங்கள், 7 ஏப்ரல் 2025 (11:04 IST)
இலங்கை சென்ற பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் காணவில்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இன்று மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர் நலன் குறித்து பேசினார்.
 
இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றினோம் என்றும் கூறினார்.
 
இலங்கைக்கு சென்ற பிரதமர், மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை என்றும், 97 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றமே என்றும் தெரிவித்தார்.
 
மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதிலும், மீனவர்கள் கைது, படகுகள்  பறிமுதல் தொடர்கிறது என்றும், மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும் தமிழக அரசு மீனவர்களுடன் தான் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்