இந்தியாவின் நிதித்துறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் நிர்மூலமாகி வருவதாக முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது
இந்தியாவின் நிதித்துறை ஒரு பக்கத்தில் மட்டும் அல்ல, நாலாபுறமும் நசிந்து வருவதாகவும் பழைய தொழில்கள் மூடப்பட்டு வரும் நிலையில் புதிய தொழில்கள் இல்லை பணம் இல்லை, வங்கிகள் திவால், இதுதான் இன்றைய இன்றைய பொருளாதாரம் என்றும், இதனை மறைப்பதற்கு உலகமே இப்படித்தான் இருக்கிறது என்று சமாளித்து வருவதாகவும், வங்கிகளை இணைக்கின்றோம் என்ற பம்மாத்து, வருமான வரியில் மாற்றங்கள் என்ற தேன் தடவல்கள் என்றும் நிதி அமைச்சகம் கூறி வருவதாகவும் முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது
ஒருநாள் இரவில் சரிசெய்ய இது காஷ்மீர் பிரச்சனை அல்ல என்றும், காஷ்மீரில் நாளையே நினைத்தால்கூட ரத்து செய்த சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்றும்க், ஆனால் இன்று சிக்கலாக இருக்கும் பொருளாதாரத்தை சரி செய்ய தனி மனிதர்களால் முடியாது என்றும், பொருளாதாரத்தை தூக்கி நிலைநிறுத்த 10 ஆண்டுகள் ஆகும் என்றும், இதைத்தான் இன்றைய பிரதமருக்கு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அபாய சங்கு ஊதுகிறார் என்றும் முரசொலியில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக 5 சதவீதமாக சரிந்துள்ளது என்றும், பாஜக அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் கூறியுள்ள முரசொலி, 2018ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டு 5 சதவீதமாக சரிந்துள்ளது என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலியின் அதிரடியாக இந்த தலையங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது