நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஒன்றினைக்கப்படும் எனவும், கனரா பேங்க் மற்றும் அலகாபாத் வங்கிகளும் இணைக்கப்படும் என்றும், ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் இணைக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் வங்கியும் ஆலகாபாத் வங்கியும் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த கையோடு, இந்த இணைப்பு நடவடிக்கைகளால் ஊழியர்களின் வேலைக்கு எந்த பிரச்சனையும் வராது என தெரிவித்தார்.