மம்தா பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!?

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (10:48 IST)
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் 8 கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் “நியாயமான, சுதந்திரமான தேர்தலில்தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை உள்ளது; தலைமைத் தேர்தல் ஆணையம் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்துக்கட்சிகளுக்கும், வேட்பாளர்களும் உரிய வாய்ப்பு வழங்கி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்