14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்டது. 222 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 117 ரன்கள் சேர்த்து கிட்டத்தட்ட வெற்றி பெறவைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி பந்தில் அவர் அவுட் ஆனதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.