இந்த நிலையில் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் குறைந்துள்ளது. ஆனால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை போல் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்து உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040-க்கும் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ. 8,755-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.