யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

Siva

திங்கள், 14 ஏப்ரல் 2025 (11:34 IST)
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் தொலைபேசி மூலமாக வித்தியாசமான முறைகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி, ஒலி மூலம் நம்ப வைக்கும் மோசடிகள், மேலும் டிஜிட்டல் கைதுகள் என புதிய புதிய வகைகளில் திருடர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  பல தீர்வுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இனி பரிச்சயமற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் பின்னணியில் உள்ள நபரின் பெயர் நேரடியாக உங்கள் மொபைல் திரையில் தெரிய இருக்கும்.

இந்த திட்டம் "அழைப்பாளர் பெயர் காண்பிக்கும் வசதி" என்ற பெயரில் அறிமுகமாகவிருக்கிறது. இதற்காக ட்ரூகாலர் போன்ற தனி செயலியை  பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த புதிய அம்சத்தை விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன.

இந்த சேவை முதலில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதன் பின், படிப்படியாக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் விரிவாக அறிமுகப்படுத்தப்படும்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்