பெங்களூரை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டில் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரதிஷ்குமார் என்பவர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். அதன் பிறகு, சிறுமியின் உடலை விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா ஆதாரங்கள் மூலம் குற்றவாளியை பிடித்தனர். பின்னர், விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்ற போது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், போலீஸ் வாகனத்தின் மீது கற்கள் வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலீஸ்காரர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தினர். அந்த குண்டு குற்றவாளியின் கால் மற்றும் மார்பு பகுதிகளில் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஐந்து வயது சிறுமியை கொன்ற குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்ததும், பொதுமக்கள் அந்த என்கவுண்டரை வரவேற்று, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். என்கவுண்டர் செய்த போலீஸ் கமிஷனருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.