பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

Siva

திங்கள், 14 ஏப்ரல் 2025 (11:51 IST)
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால், நான் கட்சியிலிருந்து விலகுவேன்” என திருமாவளவன் கூறியது வெறும் வதந்தி மட்டுமே. நினைத்துப் பார்க்க முடியாத அந்தச் செய்தியை பரப்பி வருகின்றனர். இந்தச் செய்திகளினால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.
 
75 ஆண்டுகால திராவிட பாரம்பரியம் கொண்ட அதிமுகவிலிருந்து நான் விலக மாட்டேன். என்னை அடையாளம் காட்டியது அதிமுகதான். எம்ஜிஆர், ஜெயலலிதா தான் என்னை அடையாளம் காட்டினார்கள்.
 
பதவிக்காக ஜெயக்குமார் யாரது வீட்டு வாசலிலும் நின்றதில்லை. “பதவி என்பது தோளில் போட்ட தூண்டு” என்று அண்ணா கூறினார். ஆனால் என்னைப் பொருத்தவரை, அது ஒரு கர்சீப் தான் — அதிமுகதான் என் உயிர் மூச்சு” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்