இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு!! ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயர்ந்தது?

Mahendran
வியாழன், 5 டிசம்பர் 2024 (10:49 IST)
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
முன்னணி பால் நிறுவனமான திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆக உயர்ந்துள்ளது. முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 என உயர்ந்துள்ளது.
 
மேலும் திருமலை பால் நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 என விற்பனையாகி வருவதாகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31-ல் இருந்து ரூ. 33-ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது.
 
டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 
இருப்பினும் ஆவின் பால் உயர்த்தப்படவில்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்