ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி; வார்டுகளில் கண்காணிப்பு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:42 IST)
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார்டு வாரியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நாளை தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நலவாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகம் முழுவதும் 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். சென்னையில் 35 சதவீதம் மக்கள் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். மக்களுக்கு கொரோனா மீது இருந்த அச்சம் போய்விட்டது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பணிகளுக்காக வார்டுக்கு 5 தன்னார்வலர்கள் வீதம் 200 வார்டுகளில் 1000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்