UPI சேவை மீண்டும் பாதிப்பு.. ஒரே மாதத்தில் மூன்றாவது முறை.. பயனர்கள் கவலை..!

Siva

செவ்வாய், 13 மே 2025 (09:09 IST)
பேடிஎம், ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்ற UPI பேமெண்ட் செயலிகளில் ஏற்பட்ட சேவை பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் இயல்புநிலைக்கு வந்துள்ளன. 
 
நேற்று மாலை சுமார் மாலை 7 மணிக்கு இந்தியா முழுவதும் உள்ள UPI பயனர்கள் பரிவர்த்தனைகளை முடிக்க முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு மாதத்துக்குள் இது மூன்றாவது முறையாக UPI சேவைகள் முடங்குவதால், டிஜிட்டல் கட்டணங்களின் நம்பகத்தன்மை குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன. இந்த கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
 
சமூக ஊடகங்களில், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் சில பேடிஎம் பயனர்களிடமிருந்து பரிவர்த்தனை தோல்வியடைந்தது குறித்து புகார்கள் பெருமளவில் பதிவாகின. சேவைகள் முடங்கியதை கண்காணிக்கும் 'டவுன் டெடக்டர்' என்ற தளத்தில் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
 
இருப்பினும் தற்போது இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும் பண பரிவர்த்தனை நடப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்