அமெரிக்காவில் 10 - 12 வயது மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்து பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் 36 வயதான ஜாக்குலின் மா. இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 12 வயது சிறுவனோடு நெருங்கி பழகியதோடு, அவனுக்கு காதல் கடிதங்கள் அளிப்பது, சாட் செய்வது என்று இருந்துள்ளார். அவ்வப்போது சிறுவனுடன் பாலியல் ரீதியாகவும் அவர் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜாக்குலின் காதல் கடிதங்கள், ஆபாச சாட்டிங்கை பார்த்த சிறுவனின் தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.
ஜாக்குலின் இதுபோல அந்த பள்ளியில் படிக்கும் 10 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள் பலருக்கு பரிசுகள் கொடுத்து பாலியல் உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செயப்பட்ட ஜாக்குலின்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K