ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்.. இளம்பெண்ணுடன் பத்திரிகையாளர் கைது..!

Siva

செவ்வாய், 13 மே 2025 (08:50 IST)
ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பத்திரிகையாளர் ஒருவர் இளம் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரஜாஸ் சித்திக் என்பவர் நாக்பூரில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
 
இதனை அடுத்து நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் இஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் தற்போது விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
 
மேலும் கொச்சியில் உள்ள ரிஜாஸ் வீட்டில் சோதனை நடந்ததாகவும், இந்த சோதனைகள் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஜனநாயக மாணவர் சங்கப் பிரதிநிதியாக இருந்து வரும் ரிஜாஸ் ஏற்கனவே காஷ்மீர் குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்