அரசு வேறு; அரசியல் வேறு..! – பிரதமர் வருகை குறித்து கனிமொழி கருத்து!

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (13:28 IST)
பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் திமுக அதை வரவேற்பது குறித்த விமர்சனங்களுக்கு திமுக எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காக பிரதமர் மோடி ஜனவரி 12ல் தமிழகம் வர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.

முன்னதாக எதிர்கட்சியாக இருந்தபோது திமுகவினர் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் Go Back Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள நிலையில் பிரதமர் மோடியை திமுக வரவேற்பது குறித்து பல்வேறு கட்சிகளும் பலவிதமாக பேசி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பேசியுள்ள திமுக எம்.பி கனிமொழி “மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒருபோதும் ஆதரிக்காது. மாநில திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது அரசின் கடமை. அரசு என்பது வேறு, அரசியல் நிலைபாடு என்பது வேறு” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்