ரஜினியின் பாபா சின்னத்தில் தாமரை - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (10:49 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது பாபா சின்னத்தில் இருந்து தாமரையை நீக்கியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். மேலும், தான் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடத்தினார். அப்போது மேடையில் பாபாவின் சின்னம், தாமரையில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது.
 
எனவே, அவர் பாஜகவின் பினாமியாக செயல்படுவார் எனவும், அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் எனவும் பலர் இணையத்தில் பேச தொடங்கினர். மேலும், நெட்டிசன்கள் பலர் அவரை பாஜகவுடன் இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர். 

 
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், பாபா சின்னம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அதில் தாமரை சின்னம் இல்லை. ஆனால், அந்த சின்னத்தை சுற்றி பாம்புவின் உருவம் இருந்தது. இது, ராமகிருஷ்ண மடத்தின் சின்னத்தோடு ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாபா முத்திரையில் இருப்பது ஒரு மலர். அவ்வளவுதான். அது தாமரை எனவும், அது பாஜகவை குறிப்பதாகவும் தேவையில்லாமல், வேலை வெட்டி இல்லாதவர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்