ஜெயலலிதா ,கருணாநிதி இருந்தவரை மூன்றாவது நபர் ஒருவர் அரசியலில் தலையெடுக்க முடியாத நிலை இருந்தது. அப்படியே அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் செல்லாக்காசுகளாக ஆக்கப்பட்டனர். இதற்கு விஜயகாந்த் ஒரு நல்ல உதாரணம். இதற்கு முக்கிய காரணம் பல்வேறு கருத்துவேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி இந்த விஷயத்தில் ஒற்றுமையுடன் இருந்ததுதான்
மற்ற நடிகர்களின் அரசியல் அறிவிப்புக்கும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதால் ரஜினியை திராவிட கட்சிகள் சீரியஸாகவே பார்க்கின்றனர். அதே நேரத்தில் ரஜினியுடன் நேரடியாக மோதாமல் லட்டர்பேட் கட்சிகள் மூலம் காரசாரமான அறிக்கைகள் மூலம் ரஜினியை எதிர்க்க திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ரஜினி மீது கன்னடர், மராட்டியர் போன்ற விமர்சனங்கள் இனி பெரிதாக எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது