நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து விட்டார். 1996-ம் ஆண்டு ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்பினர். ஆனால், அதை அவர் தவிர்த்து விட்டார். எனவே, அவரின் பல ரசிகர்கள் அதிமுக, திமுக கட்சியில் இணைந்து விட்டனர். தற்போதுஅவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா இல்லாத அதிமுக, கருணாநிதி இல்லாத திமுகவை விரும்பாத பலர் இன்னும் அக்கட்சிகளில் உள்ளனர். திமுகவை பொறுத்தவரை ஸ்டாலினின் தலைமையை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், அதிமுகவின் தலைமையாக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரும் இருக்கிறார்கள்.
எனவே, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளிலிருக்கும் பலர், ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது அதில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.