எனது மகள்களை பொதுக்குழுவிற்கு வரக்கூடாது என்று கூறிவிட்டேன்: கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:21 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடிய நிலையில் பரபரப்பாக பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன என்பது தெரிந்ததே.
 
கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணி குறித்து பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், கமல்ஹாசன்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவர் என்பது குறித்த தீர்மானங்கள் இயற்றப்பட்டன 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் வருவதாக கூறினார்கள் என்றும் ஆனால் நான் தான் வர வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள். ஆனால் வாரிசு அரசியலாக எனது கட்சி மாறி விடக்கூடாது என்பதால்தான் நான் மறுத்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசனின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்