சட்டமன்றத் தேர்தல்; மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துபோட்டி???

வியாழன், 11 பிப்ரவரி 2021 (15:24 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எத்தனை சுற்றுகளாக தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து வருகிறது..

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “தமிழகத்தில் தேர்தல் தொடங்குவது குறித்து டெல்லி செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும், தமிழகத்தில் மே 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்”என கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் இன்று தனது பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வேட்பாளர்களை நியமிப்பது. கூட்டணி உள்ளிட்ட அனைத்திலும் கமல்ஹாசன் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வழங்கியுள்ளது.

அதேபோல் மக்கள்  நீதி மய்யம் கட்சின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்படுவதாக இன்று நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,அதிமுக மற்றும் திமுவை கடுமையாக விமர்சித்தார்.

.இதுகுறித்து அவர் கூறியதாவது :

திமுக, அதிமுக மாறி மாறி ஊழல் செய்து வருகிறது. அவர்களுக்கு எதிராக நாம் மாற்றத்தைக் கொண்டு வர அதிகமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோரு கூட இருங்கள். தன்னமிக்கை இல்லாதவர்கள் வெளியேருங்கள் கதவு திறந்துஹ்டான் இருக்கிறது எனவே உள்ளே வருபவர்கள் உழைக்க வேண்டுமென்று தன் கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் திராவிட கட்சிகளை விமர்சிப்பதைப் பார்த்தால் அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப்போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்