சென்னையில் கொரோனா தீவிரம்! தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்த அரசு தீவிரம்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (14:38 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகள் தேவைக்காக தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்த சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 5 மண்டலங்களில் பாதிப்பு நிலவரம் 2 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையின் மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்த சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி பெசண்ட் நகரில் இயங்காமல் உள்ள தனியார் மருத்துவமனை , அரும்பாக்கம் மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மருத்துவமனைகள், மற்றும் துறைமுக மருத்துவமனையின் இரண்டு தளங்களை கொரோனா வார்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்ற வழக்கு உள்ளதால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கூடுதலாக 2500 படுக்கை வசதிகள் கிடைக்குமென்றும், இந்த மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை அட்சோர்சிங்க் முறையில் பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்