4000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

திங்கள், 8 ஜூன் 2020 (11:13 IST)
சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே செல்வது சுகாதாரத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன்படி சென்னை  ராயபுரம் மண்டலத்தில் 3859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து தண்டையார்பேடை மண்டலத்தில் 2835 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2518 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2431பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2167பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1974 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1274 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1054 பேர்களும்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் திருவொற்றியூர் மண்டலத்தில் 813 பேர்களும், அம்பத்தூர் மண்டலத்தில் 807 பேர்களும், மாதவரம் மண்டலத்தில் 614 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சேர்த்து மொத்தமாக 22,149 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்