உலகிலேயே கொரோனா பாதிக்காத பகுதிகள் இதுதான்! – ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (14:17 IST)
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்குள்ளாக உலகம் முழுவதும் வேகமாக பரவியது. பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வூகானுடன் பெரிய அளவில் தொடர்பே இல்லாத அமெரிக்கா உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வூகானுடன் வர்த்தக தொடர்பில் இருந்த திபெத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சுற்றுலாதளமான திபேத் கொரோனா பாதிப்பில் குறைவாக உள்ளது ஆய்வாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் திபேத், ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் நிலப்பகுதிகளில் வாழ்பவர்களை விட மலைப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு கொரோனா தாக்குதல் குறைவாக நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர். அவ்வாறாக பாதிக்கப்படுபவர்களும் சாதாரணமாக குணமடைய எடுக்கும் நாட்களை விட முன்னதாகவே குணமடைவதும் தெரிய வந்துள்ளது. மலைப்பகுதிகளில் ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைப்பதால் மலைவாழ் மக்கள் உடனடியாக குணமடைவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள வெப்பநிலை, காற்று போன்றவையும் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவிலும் மலைப்பகுதிகளான சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் ஆய்வாளர்களின் கூற்று கிட்டத்தட்ட சரியானதாக இருப்பதாக அறிய முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்