குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 2 மார்ச் 2025 (11:33 IST)
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், நேற்று மாலை மட்டும், புலியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று காலை முதல் புலியருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை குறைந்து, தண்ணீர் வரத்து குறையும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று கூறியிருப்பது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்