ஆம் ஆத்மி அலுவலத்திற்கு பூட்டு.. வாடகை கொடுக்காததால் அதிரடி நடவடிக்கை..!

Siva
ஞாயிறு, 2 மார்ச் 2025 (11:32 IST)

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு வாடகை செலுத்தப்படாததால் பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் ஆம் ஆத்மி அலுவலகம் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த வீட்டிற்கு மூன்று மாதங்களாக வாடகை செலுத்தப்படவில்லை. இதனால், அந்த வீட்டின் உரிமையாளர் பூட்டு போட்டு முடக்கிவிட்டார்.

இந்த சம்பவம் ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் கட்சியிடம் நிதி இல்லை, எனவேதான் எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. அலுவலக வாடகை எவ்வளவு? எவ்வளவு காலமாக செலுத்தப்படவில்லை? என்பதும் எனக்குத் தெரியாது," என்று ஆம் ஆத்மியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியபோது, "ஆம் ஆத்மியின் மத்திய பிரதேச அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது, அடுத்ததாக காங்கிரஸ் அலுவலகம் மூடப்படும்," என்று காமெடியாக பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி, கோடி கணக்கில் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு வாடகை செலுத்த முடியவில்லையா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்