நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

Mahendran

சனி, 1 மார்ச் 2025 (17:30 IST)
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், இந்த பகுதியில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்து, 85 அடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்